Wednesday, February 27, 2013

கொங்கு நாட்டு திருத்தலங்கள்- கொடிமாடச்செங்குன்றூர்.


 கொங்கு நாட்டு திருத்தலங்கள்
கொடிமாடச்செங்குன்றூர்.



சிவதலம் பெயர் :  கொடிமாடச்செங்குன்றூர்   (திருச்செங்கோடு)
இறைவன் பெயர்:           அ/மி        அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர்
இறைவி பெயர்  :            அ/மி       பாகம்பிரியாள்
பதிகம்   திருஞானசம்பந்தர் - 1
திருச்செங்கோடு சேலத்தில் இருந்து 27 கி.மி. தொலைவிலும், ஈரோட்டில் இருந்து 18 கி.மி. தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து திருச்செங்கோட்டிற்கு உள்ளது.
தேவாரப் பதிகங்களில் கொடிமாடச் செங்குன்றூர் என்று பாடப்பெற்ற சிவலம் தற்போது திருச்செங்கோடு என்று கூறப்படுகிறது. இந்த சிவதலத்தில் உள்ள கோவில் மேற்கு நோக்கி ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த மலை செந்நிறமாக இருப்பதால், செங்கோடு என்ற பெயர் ஏற்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1900 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்குச் செல்ல சுமார் 1250 படிக்கட்டுக்கள் கொண்ட வழியில் ஏறியும் அல்லது மலைப்பாதை வழியாகப் பேருந்து மற்றும் மகிழ்வுந்து மூலம் செல்லலாம். மேலே செல்லும் வழியில் பல மண்டபங்கள் உள்ளன. குன்றின் உச்சிக்குகச் சென்றவுடன் வடதிசையில் 5 நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. குளிர்ந்த காற்று நம்மை தழுவும் பொழுது நமக்கு புத்துணர்சி ஏற்படுகிறது.ஏறி வந்த களைப்பு விலகி உற்சாகம் வருகிறது.

அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.
செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது. அருணகிரிநாதர் தனது "திருப்புகழில்" இத்தலத்து முருகனைப் பற்றி பாடியுள்ளார். செங்கோட்டு வேலவர் சந்நிதிக்கு முன்புள்ள மண்டபத்திலுள்ள தூண்களில் காணப்படும் சிற்பங்கள் நுணுக்கமான வேலைப்படுடன் கூடியவை.
படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சந்நிதி
(20 அடி நீளம்) 

பிரசித்தம்.நாகதோஷம்நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.
60 ஆம் படி மிகவும் விசேஷம்.இங்கு செய்யும் சத்யம் நீதி மன்றத்திலும் செல்லும் எனக்கூறப்படுகிறது.
வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளிக்
கொந்து அணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே
                                                       -சம்பந்தர்
                                                   
                                                         திருச்சிற்றம்பலம்

Friday, February 22, 2013

கொங்கு நாட்டுத் திருத்தலங்கள் திருபாண்டிக்கொடுமுடி


கொங்கு நாட்டுத் திருத்தலங்கள்
திருபாண்டிக்கொடுமுடி





இத்தலம் கொடுமுடி என்று அழைக்கப்படுகின்றது.ஈரோடிலிருந்து தென்கிழக்கே 39 கி.மீ.தொலைவில் உள்ளது.இவ்வூரில் இரயில் நிலையம் உள்ளது.
மேருவின் ஒரு சிகரம்கீழே விழுந்ததால் உண்டான தலம்.
பிரம்மா,விஷ்ணு,சிவன் மூவரும் அருளும் மும்மூர்த்தித் தலம்.
3 முகமுடைய பிரம்மா சந்நதி சிறப்பு.வன்னிமரத்தடியில் இருக்கிறர்.
திருமால் பெயர் வீரநாரயணர்.
இங்கு காவிரி ஆறு தென் வடலாக செல்கிறது.காசிக்கு இணையாக கூறப்படுகிறது.
மூவர் பாடல் பெற்றது.சுந்தரர் நமசிவாய திருப்பதிகம் பாடியுள்ளார்.
இறைவர்: /மி கொடுமுடிநாதர், (மகுடேச்சுவரர்)
இறைவி: /மி   பண்மொழிநாயகி,(மதுரபாஷினி)
தீர்த்தம்: காவிரி
தலமரம்:வன்னி
தென்முகக்கடவுளுக்கு கீழ் முயலகனும், சனகாதி முனிவர்கள் நான்கு பேருக்கு பதிலாக ஒருவர் மட்டுமே இருக்கிறார்.
மற்றுப் பற்றெனகின்றி நின் திருப் பாதமே மனம் பாவித்தேன்
 பெற்றலும் பிறந்தேனினிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
 கற்றவர் தொழுதேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக்கொடுமுடி
 நற்றவா உனை நான் மறக்கினுஞ் சொல்லுநா நமசிவாயவே
                                             -சுந்தரர்.  
     திருச்சிற்றம்பலம்.                                                                                                                                                                           

கொங்கு நாட்டுத் திருத்தலங்கள் வெஞ்சமாக்கூடல்.


கொங்கு நாட்டுத் திருத்தலங்கள்
வெஞ்சமாக்கூடல்.





இத்தலம் கருவூருக்கு தெற்கில் அரவக்குறிச்சி பாதையில் உள்ள ஆறுரோடு பிரிவில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
சுந்தரரால் பாடப்பெற்ற தலம். கோவில் அருகில் சிற்றாறு உள்ளது.பழைய கோவில் வெள்ளத்தால்
அடித்துச்செல்லப்பட்டதால் புதிய கோவில் நிறுவப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
கோவில் பள்ளத்தில் உள்ளது. 15 படிகள் இற்ங்கிச் செல்லவேண்டும்.
இறைவன்:/மி கல்யாண விகிர்தநாதேச்சுவரர்
இறைவி: /மி பண்ணேர் மொழியாள்( மதுர பாஷினி)
ஆறுமுகக்கடவுள் தனிச் சந்நிதி உண்டு. அருணகிரிநாதர் இம் முருகன் மேல் திருப்புகழ் பாடியுள்ளார்.
63 நாயன்மார் சிற்பங்கள் நேர்த்தியாக உள்ளன.
வெஞ்சன் என்ற அசுரன் வழிபட்ட தலம்.
சிவபெருமான் தன் பக்தை யான ஒரு கிழவியிடம் தன் பிள்ளைகளை ஈடு காட்டி பொன்பெற்று சுந்தரருக்குக் கொடுத்ததாக வரலாறு.
இன்றும் பிள்ளை தத்தெடுப்போர் இக்கோவிலில் இறைவரிடம் தவிட்டுக்கு வாங்குவது உண்டு.
எறிக்குங் கதிர்வேயுதிர் முத்தமொடேல மிலவங் கந்தக் கோலமிஞ்சி
  செறிக்கும் புனலுட் பெய்து கொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்குந்த்தழை மாமூடப் புன்னை ஞாழல் குருக்கத்தி கண்மேற் குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியெனையும் வேண்டுதியே
                                                                                                                    -சுந்தரர்.
                                                    திருச்சிற்றம்பலம்

கொங்கு நாட்டு த்திருத்தலங்கள் கருவூர்


கொங்கு நாட்டு த்திருத்தலங்கள்
கருவூர்













இத்தலம் பெரிய ஊர்.பேருந்து மற்றும் இரயில் இணைப்புக் கொண்டது.
கோவில் மத்யபேருந்து நிலையம் அருகில் ஊள்ளது.
இக்கோவிலுக்குஆநிலைஎன்று பெயர். காமதேனு வழிபட்டத் தலம்.
சிவனுக்கு பால் அபிசேகம் சிறப்பு.இந்த தலம் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றது.
இறைவன்: /மி பசுபதீச்சுவரர் என்றும் ஆநிலையப்பர் என்றும் கூறுவர்.
இரு அம்பாள் சந்நதிகள் உள்ளன.
இறைவி:  1./மி  அலங்காரவல்லி, (கிழக்குப் பார்த்த சன்னதி)
                 2./மி சவுந்திரநாயகி(தெற்குப் பார்த்த சன்னதி)
(கருவூரை அடுத்த அப்பி ப்பாளையம் என்ற ஊரில் கிராம அதிகாரிமகள் இறைவரிடம்
பக்தி கொண்டு சிவபதம் அடைந்து அலங்காரவல்லி அம்பாளாக இறைவனை மணந்ததாக வரலாறு)
பெரிய கோவில்.7நிலை இராச கோபுரம். புகழ்ச்சோழர் நாயனார் ஆண்ட பதி.எறிபத்தர் நாயனார் பிறந்தருளிய தலம்.
திருவிசைப்பா பாடி அருளிய கருவூர்த்தேவர் பிறந்த தலம்.கோவிலில் அவருக்கு தனிக் கோவில் உள்ளது.அங்கு தியானம்செய்ய மண்டபம் உள்ளது.இங்கு இறைவன் இந்த சித்தருக்காகசாய்ந்து கொடுத்தாக செய்தி.
விநாயகர் பெயர் பசுபதி விநாயகர்
உமை முருகு இறைவன் (சோமஸ்கந்தர்) சந்நதியும் உண்டு.
நால்வர் அரங்கம்என்ற அரங்கம் உள்ளது.இங்கு சமய சொற்பொழிவுகள் நடைபெறும்.
தேவர் திங்களும் பாம்பும் சென்னியும்
மேவர் மும்மதில் எய்தவில்லியர்
காவலர் கருவூருள் ஆநிலை
மூவராகிய மொய்ம்பர் அல்லரே.”-சம்பந்தர்.

                                                                                திருச்சிற்றம்பலம்.


Thursday, February 21, 2013

கொங்கு நாட்டு திருத்தலங்கள்-திருநணா


கொங்கு நாட்டு திருத்தலங்கள்
திருநணா(பவானி)
இத்தலம்  தற்பொழுது பவானி என்று வழங்கப்படுகிறது.  சேலம்,ஈரோடு கோவை முதலிய பெருநகரங்களில் இருந்து செல்ல வசதிகள் உள்ளன.
திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற பெருமையுடையது.பவானி ஆறும் காவிரி ஆறும் கூடும் இடத்தில் உள்ளது.சரசுவதி ஆறும் இங்கு கூடுவதாக ஐதீகம்(கண்களுக்குப்  புலப்படுவதில்லை). எனவே பவானி கூடல் என்றும் பவானிகூடுதுறை என்றும் பவானி முக்கூடல் என்றும் வழங்கப்படுகிறது.
பழமையான திருக்கோவில்.
இறைவன்: /மி சங்கமேஷ்வர்

இறைவி: /மி வேதநாயகி அம்பாள்

தீர்த்தம்: பவானி-காவிரி சங்கமம்.
குபேரன்,விசுவமித்திரர்,பராசரர் முதலியோர் வழிபட்ட தலம்.
”பந்தார் விரல்மடவாள் பாகமா நாகம் பூண்டேற தேறி
அந்தா அரவணிந்த அம்மானிடம் போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார் பொழிலில் வண்டு பாடச்
செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திருநணாவே.
                                                               -சம்பந்தர்

ஆறுமுகக்கடவுளுக்கு தனிப்பெரும் சன்னதி உள்ளது.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல் உண்டு.
இக்கோவிலுக்குள் ஆதிகேசவப்பெருமாள் கோவில் இருப்பது சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒர் எடுத்துக்காட்டு.

ஆடல்வல்லான், 63 நாயன்மார், தென்முகக்கடவுள், ஜுரஹரேஸ்வரர், சனீஸ்வரர் ஆகியோர்க்கு தனி சன்னிதிகள் உள்ளன.
சமீப காலத்தில் 63 நாயன்மார்க்கு புதிய ஐம்பொன்சிலைகள் செய்யப்பட்டு நடராசர் சன்னதிக்கு எதிரில்அழகுற கொலு ப்படி போல அமைத்து பொலிவு செய்துள்ளனர்.
மத்திய தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உட்பட்ட பதிவுகளை ப்பார்க்க முடிகிறது. இந்து அறநிலையத் துறை ஆளுகைக்கு உட்பட்டது.
இக்கோவிலுக்கு தனியாகஒரு யானையும் உண்டு.
இங்கு திருமணங்கள் நடைபெறுகின்றன.சில முகூர்த்தநாட்களில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவதும் உண்டு .திருமண பரிகார பூசைகளும் காவிரிக்கரையில் நடைபெறுகின்றன.
கூடுதுறையில் குளிப்பதில் தனி ஆனந்தம் தான். தினசரி நீராடுவோரும் உண்டு. நீராடும் குழுவினர் என்ற ஒர் அமைப்பும் இங்கு உள்ளது.
இங்கு உள்ள அம்பாள் ஒருமுறை ஆங்கிலேய கலக்டெர் கனவில் தோன்றி அவர் தங்கி இருந்த கட்டிடத்தில் இருந்து வெளியேற்ற மறுகணம் அக்கட்டிடம் விழுந்தது.ஆங்கிலேயர் பரம பக்தரானார்.அவர் வேற்றுமதத்தினராதலால் அவர் வழிபட மதில் சுவற்றில் வெளியில் இருந்து தரிசனம் செய்யும்வண்ணம் அமைப்பு உள்ளது. அவர் அம்பிகைக்கு தந்தத்தினால் ஆன பள்ளியறை கட்டிலை பரிசளித்துள்ளார்.அதை இன்றும் நாம் காணலாம்.
                                                           திருச்சிற்றம்பலம்