Saturday, April 27, 2013

நால்வர் காட்டும் நல்வழி-சுந்தரர்

வன்றொண்டன் பாடிய வண்டமிழ்

 நாம் காணவிருப்பது திரு சுந்தர மூர்த்திநாயனாரைப் பற்றிய குறிப்பு ஆகும். இவர் திருக்கையிலையில் ஆலால சுந்தரர் ஆக சிவபெருமானது அணுக்கத்தொண்டராகத் திகழ்ந்தார். இறைவிக்கு அணுக்கத்தொண்டு புரிந்த அனிந்திதை, கமலினி,ஆகிய இருவர் மீதும் மனம் கவர்ந்த நிலையில் இறைவன் ஆணைப்படி அவ்விருவரோடும் மனிதப் பிறவி எடுத்து அவர்களுடன் வாழ்ந்து பின் கையிலை மீண்டவர்.

திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதி சைவ அந்தணர் குலத்தில் சடையநாயனார், இசை ஞானியாரின் மகனாக நம்பி ஆரூரர் அவதாரம் செய்தார்.சிறு தேர் உருட்டும் பருவத்தில் அரசன் நரசிங்க முனையரையரால் அபிமான புத்திரராக வளர்க்கப்பெற்று, பின் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை மணம் முடிக்கும் தறுவாயில் அடிமை ஓலைக் காட்டி தடுத்தாட்கொள்ளப்பட்டு, வந்தவர் இறைவன் என உணர்ந்து,”பித்தாபிறை சூடி” என பதிகம் பாடினார். பின்பு இறைவனாலேயே பரவையாரைச் சந்தித்து காதல் திருமணம் செய்து கொண்டார்.

 திருத்தொண்டத்தொகையில் இறைவன் அடியார்கள் பெயர்,இடம் பெறும் வகையில் அமைத்து, அவர்களின் பக்தி நிலையின் உயிர் நாடியான அம்சத்தை சுட்டிக்காட்டியுள்ள பாங்கு போற்றத்தக்கது.தனி அடியார்கள் மட்டும் அல்லாமல் தொகை அடியார்களாக தில்லை வாழ்அந்தணர், பத்தராய் பணிவார்கள்,பரமனையே பாடுவார் என வகைப் படுத்திப் பின்னாளில் பெரியபுராணம் அமைய வழி கோலியுள்ளார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டு, தன் தேவாரத்தில்,” வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே’ என்றும், “பரவை பசி வருத்தமது, நீயும் அறிதியன்றே”, மாதர் நல்லாள் வருத்தமது நீயும் அறிதியன்றே” என்று பாடி, குண்டையூர் கிழார் தந்த நெல் மலையை, திருவாரூரில் சேர்ப்பித்தார். இறைவன் அளித்த பன்னீராயிரம் பொன்னைத் திரு முதுகுன்றம் ஆற்றில் இட்டுத் திருவாருர் குளத்தில் எடுத்தார். திருக்குருகாவூரில், பொதி சோறும், திருக்கச்சூரில் பிச்சைச் சோறும் இறைவன் கொணர்ந்து தரப்பெற்றார். 

திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்து”மேவாதிங்கு யான் அகலேன்” (பெரிய புராணம் 3419) என சபதம் செய்து, சபதம் பொய்த்தமையால் கண் இழந்து, திருவெண்பாக்கத்தில் ஊன்று கோல் பெற்று, காஞ்சிபுரத்தில் “ஆலந்தான் உகந்து அமுது செய்தானை” பாடி இடக் கண்ணையும், திருவாரூரில் “மீளா அடிமை” பாடி வலக்கண்ணையும் பெற்றார்.

வன் தொண்டன் என்று இறைவனால் அழைக்கப்பட்ட சுந்தரர், இறைவனை தோழனாகவே கருதி, பரவையாரிடம் தூது அனுப்பினார். இந்த செய்தி அறிந்து  கோபமுற்று சூலையால் வாடிய போதும் சுந்தரர் கையால் குணம் பெறக் கூடாது என்று தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட ஏயர் கோன் கலிக்காமர்க்கு  மீண்டும் உயிர் அளித்து, பின்  நண்பனாக்கிக் கொண்டார். சோமாசி மாறர், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரும் இவரது நண்பர்களாவர்.

வன் தொண்டன் என்று இறைவனால் அழைக்கப்பட்ட சுந்தரர், இறைவனை தோழனாகவே கருதி, பரவையாரிடம் தூது அனுப்பினார். இந்த செய்தி அறிந்து  கோபமுற்று சூலையால் வாடிய போதும் சுந்தரர் கையால் குணம் பெறக் கூடாது என்று தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட ஏயர் கோன் கலிக்காமர்க்கு  மீண்டும் உயிர் அளித்து, பின்  நண்பனாக்கிக் கொண்டார். சோமாசி மாறர், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரும் இவரது நண்பர்களாவர்.“ஏழிசையாய்” எனத்துவங்கும் தேவாரத்தில் “ என்னுடைய தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி” என இறைவனைக் குறிப்பிடுகிறார். ஆக சக மார்க்கத்தில் இறைவனை வழிபடலாம் என் வழி காட்டியவர் சுந்தரர்.

No comments:

Post a Comment