Monday, February 4, 2013

திருமகள் வழிபாடு 108 போற்றி


                                                          திருமகள் வழிபாடு




1.ஓம்  திருவே உருவே போற்றி
2.திருவே தாயே
3.வளமெலாம் தருவாய்
4.நலமெலாம் தருவாய்
5. பாற்கடல் உதித்தாய்
6.வலம்புரி சங்கில் தோன்றினாய்
7.வெள்ளிக்கிழமை பிறந்தாய்
8.தாமரையில் நிற்பாய்
9.தாமரை மாலை அணிவாய்
10.தாமரைக் கையினாய்
11. தாமரைக் கண்ணினாய்
12.கரம் நான்குடையாய்
13.சங்கொடு சக்கரம் ஏந்தினாய்
14.வில்வத்தில் நிலைத்தாய்
15.துளசியில் உள்ளாய்
16.பொன் அணிகலன் அணிவாய்
17.பொன் கோட்டையில் உறைவாய்
18.மாலவன் மனம் கவர்ந்தாய்
19.மாலவன் மார்பில் நிலைத்தாய்
20.ஒளிர்வதில் ஞாயிறே
21.குளிர்வதில் திங்களே
22.உலகனைத்தும் படைத்தாய்
23.உலகனைத்தும் காப்பாய்
24.உத்தமனின் பத்தினி
25.உலகினுக்கு உவப்பே
26.நல் வாழ்வு தருவாய்
27.என்றும் என்னுள் இருப்பாய்
28.இம்மையில் காப்பாய்
29.மறுமையில் துணை நீ
30.அண்டங்கள் கோடி படைத்தாய்
31.அண்டங்களை ஆள்வாய்
32.முகில்வண்ணன் களிப்பே
33.கருடவாகனம் உடையாய்
34.வேதத்தின் வித்தே
35.வேதத்தின் விளைவே
36.முப்புவி ஈன்றாய்
37.முத்தொழில் புரிவாய்
38.அலைமாமகளே
39.திருமாமகளே
40.கருணையின் வடிவே
41.மன இருள் நீக்குவாய்
42.அக ஒளி ஏற்றுவாய்
43.அழிவிலாச்செல்வமே
44.ஆனந்த வடிவே
45.நீண்ட ஆயுள் தருவாய்
46.நிலைத்தபுகழ் தருவாய்
47.உய்யும் வழி காட்டுவாய்
48.பிறவிப் பிணிகளைவாய்
49.துன்பத்தைத் துடைப்பாய்
50. இன்பம் தருவாய்
51.பாபங்களைப் போக்குவாய்
52.வறுமையைத் தீர்ப்பாய்
53.நல் ஒழுக்கம் நல்குவாய்
54.பதினாறு பேறும் தருவாய்
55.சங்கநிதி தருவாய்
56.பதுமநிதி தருவாய்
57.மாதவன் மாதே
58.மன்மதனை ஈன்றாய்
59.முத்தொழில் புரிவாய்
60.மழையாய் பொழிவாய்
61.செம்மை சேர் அழகே
62.அருளே அமுதே
63.நெடியோன் நங்கை
64.இன்னலைத் தீர்ப்பாய்
65.இன்னருள் புரிவாய்
66.ஏற்றத்தின் ஏற்றமே
67.போற்றுதற்குரியாய்
68.கோலாசுரனை வதைத்தாய்
69.தீயோரை அழிப்பாய்
70.நல்லோரைக் காப்பாய்
71.கருணைக் கடலே
72.குபேரனுக்கு அருளினாய்
73.ஆதி லட்சுமியே
74.முதலே முடிவே
75.தான்யலட்சுமியே
76.தான்யங்கள் தருவாய்
77.தனலட்சுமியே
78.செல்வம் தருவாய்
79.வீரலட்சுமியே
80.வீரம் நல்குவாய்
81.கஜலட்சுமியே
82.யானைககள் துதிக்கும் தாயே
83.சந்தானலட்சுமியே
84.மழலைச் செல்வம் தருவாய்
85.விஜயலட்சுமியே
86.வெற்றியைத் தருவாய்
87.வித்யாலட்சுமியே
88.கல்வியைத் தருவாய்
89.வரலட்சுமியே
90.நல்வரம் தருவாய்
91.ஆனந்தலட்சுமியே
92.ஆனந்தம் தருவாய்
93.மோட்ச லட்சுமியே
94.வீடுபேறு அளிப்பாய்
95.ஞானலட்சுமியே
96.ஞானம் அருளுவாய்
97.அமுதசெல்வமே
98.குமுதவடிவே
99.நாராயணியே
100.நாராயணன் நாயகி
101.வைகுந்தம் உறைவாய்
102.கற்பகத்தருவே
103.காமதேனுவே
104.குங்குமத்தில் மகிழ்வாய்
105.மங்கலம் தருவாய்
106.தஞ்சம் அடைந்தோம் தாயே
107.அஞ்சேல் என்பாய் நீயே
108.போற்றி நின்பாதம் போற்றி

Friday, January 11, 2013

திருக்கைலாயம்

திருக்கைலாய தரிசனம்


1)தென் மேற்கு தரிசனம்.



2)மான்சரோவரும் திருக்கைலாயமும்




3)வடக்குமுகம்






4)வடக்கு முகம் (பொன்னார் மேனியன்)




5)தெற்கு முகம்



6)மேற்குமுகம்








காவாய் கனகத்திரளே போற்றி!
  
கைலைமலையானே போற்றி !! போற்றி!!


Sunday, January 6, 2013

தமிழில் சங்கல்பம்


 தமிழில் சங்கல்பம்


சிறிது மலர்களையும் அட்சதையையும் எடுத்துக்கொண்டு கை கூப்பிக்கொள்ளவும். பின் வரும் மந்திரங்களைக் கூறவும்.

ஓம் விநாயகப்பெருமானே போற்றி!
ஓம் முருகப்பெருமானே போற்றி!
ஓம்  சிவபெருமானே போற்றி!
ஓம் உமை அம்மையே போற்றி!
ஓம் எஙகள் குல தெய்வமே போற்றி!
ஓம் எங்கள் இஷ்டதெய்வமே போற்றி!
(அவரவர் அன்னை, தந்தை, குரு, முன்னோர்களை மனதில் தியானம் செய்யவும்.)
எல்லாம் வல்ல சிவபெருமானே போற்றி போற்றி.
இன்று -------- வருடம், -----------(தக்‌ஷிணாயனம்/ உத்தரயணம், ) ------ருது,
----மாதம், --------(வளர் பிறை/ தேய்பிறை),-------திதியில், -------கிழமை,-----நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில், ------(காலை/மாலை) வேளையில், -------- இறைவனுக்கு, (108நாமவளிகள்/ 1000 நமாவளிகள்) கூறி வழிபட இருக்கிறோம். இந்த ஊரும் உலகமும், நாங்களும், எங்கள் உறவுகளும், நண்பர்களும், மற்றும் எங்கள் குடும்பமும், நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும், நிறைந்த செல்வமும், நல்ல புத்தியும், மன அமைதியும்,மனமகிழ்ச்சியும் பெறவும், எங்கள் ஜாதகத்தில் உள்ள குறைகள் நீங்கி, நவகோள்களும் நன்மையே செய்யவும், நாங்கள் செய்த பாவங்கள் போகவும், வியாதிகள் அகலவும், துன்பங்கள் தொடராமல் இருக்கவும், உன்னை என்றும் மறவாமல்  வழிபடவும், அருள் புரிவாய். மேலும் எங்கள் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், நல்ல வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, வீடு வாகன வசதிகள் பெருகவும், இளவயதினருக்கு உரிய வயதில் திருமணம்  கை கூடவும், திருமணமான மகளிருக்கு மாங்கல்ய பலமும்,தம்பதியர்க்கு நன்மக்கள் பேறு கிடைக்கவும் அருள் புரிவாய். நாங்கள் மனம் மொழி மெய்யால் நல்லதையே செய்யவும், நல் அருள்புரிவாய், கோயில்கள் தோறும் வழிபாடுகள் குறைவற நடைபெறவும் நாட்டில் நல்ல மழை பொழிந்து நாடு செழிக்கவும் உன்னை வழிபடுபவர்களின் மனக்குறை எல்லாம் நீங்கவும் நீ எப்போதும் எங்களுக்கு துணையாக இருக்கவேண்டும்.
( அவரவர் பெயர், நட்சத்திரம் கூறி அவரவர் வேண்டுதல்களை மனதில் சிந்தித்து வழிபடவும்.)
மலர்களை வழிபடும் தெய்வத்திடம் சேர்க்கவும்.
நாமாவளி கூறி அருச்சனை செய்து வழிபடவும்.
அருச்சனை முடிந்த பிறகு
1. ஊதுபத்தி காட்டுதல்
2.தீபம் காட்டுதல்
3. திருவமுது படைத்தல்.
4. தாம்பூலம் அளித்தல்.
5. கற்பூரம் காட்டி வழிபடுதல்.
6. மலர் தூவுதல்.
இறைவனை மனதில் இரத்தினங்கள் இழைத்த சிம்மாசனத்தில் அமரச்செய்து, சங்கொலி செய்தல், சாமரம் வீசுதல், நிறை குடம் காட்டுதல், கண்ணாடி காட்டுதல்,குடை அளித்தல், கொடி அளித்தல், மணி ஓசை செய்தல், மங்கள இசை முழங்குதல், நான்கு வேதங்கள் கூறுதல், திருமுறை விண்ணப்பம் செய்தல், இறைவனுக்கு தோத்திரங்கள் கூறி பாடல்கள் பாடுதல், வலம் வந்து வழிபடுதல் ஆகியவை செய்து பின் நாம் இதுவரை செய்த வழிபாட்டில் குறைகள் இருந்தால் மன்னிக்கும்படி வேண்டுதல்.

”கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப் பிழையும் நின் ஐந்தெழுத்தை
 சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
 எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.”

உன் பாத கமலங்களில் சரண் அடைந்தோம் எங்களைக் காப்பாற்றுவாயாக!
என்று கூறி மங்களம் பாடுதல்.

                                                சுபம்    மங்களம்.





Monday, December 31, 2012

விநாயகர் வழிபாடு.


  
                                         
                                                     விநாயகர் வழிபாடு.


இறைவழிபாடு செய்ய துவங்கும் பொழுது முதலில் விநாயக பெருமானை வழிபடல் வேண்டும்.
மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்துக்கொள்ளவும். கையில் மலர்களுடன்
பின் வரும் மந்திரங்களை கூறவும்.
எல்லாம் வல்ல விநாயகபெருமானே! நாங்கள் செய்யும் வழிபாடு எந்தவித இடையூறும் இன்றி நடை பெறுதல் வேண்டும். இடையூறுகள்   அகலும் பொருட்டு உன்னை வழிபடுகிறோம். நல்லருள் புரிவாயக!
மலர்களை பிள்ளையாரிடம் சேர்க்கவும்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்செஞ்சொல்
 பெருவாக்கும் பீடும்பெருக்கும்-உருவாக்கும்
 ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
 காதலால் கூப்புவர் தம் கை.”
மலர்களை கையில் எடுத்துக்கொண்டு பிள்ளையருக்கு அர்ச்சனை செய்யவும்.
1.ஓம் ஆனைமுகத்தானே போற்றி
2.ஓம் பார்வதி மைந்தனே போற்றி
3.ஓம் சங்கரன் புதல்வா போற்றி.
4.ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி
5.ஓம் ஐந்துக் கரத்தனே போற்றி
6.ஓம் அறுகம்புல் உகப்பாய் போற்றி
7.ஓம் ஒற்றை கொம்பனே போற்றி
8.ஓம் அன்பர்க்கு அன்பனே போற்றி
9. ஓம் ஒளவைக்கு அருளியவா போற்றி
10. ஓம் வினைகளை வேரறுப்பாய் போற்றி
11. ஓம் எருக்கம் பூமாலை அணிவோய் போற்றி
12. ஓம் இடையூறுகளை களையும் இறைவா போற்றி
13. ஓம் ஓங்கார வடிவே போற்றி
14. ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
15. ஓம் அண்டங்களை ஆள்வாய் போற்றி
16. ஓம் வளமெல்லாம் தருவாய் போற்றி

ஊதுபத்தி, தீபம் காட்டவும்.
இரண்டு வாழை பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவை வைத்து அமுதூட்டவும்.
பின் கற்பூரம் ஏற்றி பிள்ளையாருக்குக் காட்டவும்.
பாடல் பாடவும்.
”பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடுதனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.”

வினாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
வினாயகனே வேட்கை தணிவிப்பான் - வினாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

சிறிது மலர்களைப் பிள்ளையார் மீது போடவும். பின் அட்டாங்க வணக்கம் செய்யவும்.






                                   

Saturday, December 29, 2012

பேரூர் மார்கழி ஆதிரை நாள்

பேருர் ஆருத்ரா தரிசனம் அன்று எடுத்த புகைபடங்களை பகிர்வதில் மகிழ்கிறேன்(28.12.12)







.

Tuesday, December 25, 2012

கோயில்

சிவ தலங்கள் பற்றிய பகிர்வு.

தேவார பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதன்மை பெற்றதும் கோவில் என்று  குறிப்படபடுவதும் “சிதம்பரம்” என்னும் திருத்தலமாகும்.
இந்த திருக்கோவில் பற்றிய குறிப்புகளை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.


இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம்.


சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.  108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே.

வரும் 28-12-2012 வெள்ளியன்று மார்கழி திருவாதிரை.
ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிசேகம்.
 கோவை பேரூர் கோயிலில் மிகப் பெரிய அளவில் வழிபாடுகள் நடைபெரும் .தரிசனம் செய்ய கூட்டம் அலை மோதும்.