Sunday, March 3, 2013

ஈழ நாட்டு திருத்தலங்கள் 1.திருக்கோணமலை


ஈழ நாட்டு திருத்தலங்கள்
1.திருக்கோணமலை

இறைவர் திருப்பெயர்         : அ/மி திருக்கோணேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்              : அ/மி மாதுமையாள்
தல மரம்                 : கல்லால மரம்
தீர்த்தம்                           : கோணதீர்த்தம்
வழிபட்டோர்                       :
தேவாரப் பாடல்கள்          : சம்பந்தர் - நிரைகழ லரவஞ் சிலம்பொலி


spt_p_konamalai.jpg (700×300)
தல வரலாறு
·       இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு. தட்சிண கைலாயம் என்ற பெயரும் உண்டு.
·       சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள்; அந்த ஊர் இன்றும் "திரிதாய்" என்று வழங்குகின்றது.
·       போர்த்துக்கீசியர் 1624 ஆம் ஆண்டில் இத்திருக்கோயிலை பாழ்செய்துள்ளனர்.  
·       சுதந்திரம் பெற்றபின் 1950ஆம் ஆண்டில், கோயில் இருந்த நிலத்தில் ஆலயம் அமைக்க முற்பட்டுக் காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தருளச் செய்தார்கள்.
·       அக்காலத்தில் நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி தோண்டிய வேளையில் சிவனருளோ என்று கண்டவர்கள் அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமானோடு, சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், அஸ்திரதேவர் முதலாய தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்டன.
·       அவையாவும் அண்மைக் காலத்திலமைக்கப் பெற்ற திருக்கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன.
முன்னொரு காலத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்தன என்பர்.
சிறப்புக்கள்
·       உலகப்புகழ் பெற்ற திருக்கோணமலை மாவட்டத்தில் அறுபதுக்கும் அதிகமான சைவக்கோயில்கள் உள்ளன.
·       இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்கோணேஸ்வரம் தேவாரம் பெற்ற திருத்தலமாக ஒளிவீசியது.
·       ஐம்பொன்னாலான அழகு மிக்க மூர்த்தங்கள் இருக்கும் மண்டபம் - தேவ மண்டபம், கண்கொள்ளாக்காட்சி தருவதாகும்.
·       நாடொறும் ஆறுகால பூசை ஆகம விதிகளின்படி தவறாமல் நடைபெறுகின்றன.
·       திருக்கோணேசப் பெருமானின் விழாக்களில் வெளிவாரியாக நடைபெறுவது ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்கு பெருமான் எழுந்தருளும்போது, நகரிலுள்ள ஆலயங்களின் மூர்த்திகளும் தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள்.
·       ஆடி மாதம் போலவே, மகாமகத் தீர்த்த விழா, பங்குனி மாதத்தில் பூங்காவன மற்றும் தெப்பத் திருவிழா, மார்கழியில் திருவெம்பாவை விழா ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
·       நவராத்திரி நாட்களில் ஸ்ரீ சக்ரபூஜை வெகுசிறப்பாக நடைபெறுகிறது.
நாடு : இலங்கை
மாநிலம் : திருக்கோணேஸ்வரம் கிழக்கு
திருக்கோணேஸ்வரத்திற்கு இரயில் மூலம் கொழும்பிலிருந்து போகலாம். பேருந்து வசதிகளும் உள்ளன. திருக்கோணமலை இரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கு நடந்து போகலாம்.
கோவில் உயர்ந்த இடத்தில் கடலோரத்தில் அமந்துள்ளது
கிழக்கு கோபுரம் தாண்டியவுடன் பெரிய பாறை அதை அடுத்து 50 அடி ஆழத்தில் கடல் ஆர்ப்பரிக்கிறது..
தெற்கு வாயில் நுழையும் பொழுது நந்திக் கொடியும் மணி மண்டபமும் நம்மை வரவேற்கின்றன.
.    “தாயினும் நல்ல தலைவரென்று அடியார்
தம்மடி போற்றிசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா
மாண்பினர் காண்பலவேடர்
நோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந்தாரே”
                        சம்பந்தர்               
              திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment