ஈழநாட்டுத் திருத்தலம்
2.திருக்கேதீச்சுரம்
அருள்மிகு கௌரியம்மை உடனுறை திருக்கேதீசுவரர்
மரம்: வன்னி
குளம்: பாலாவி
பதிகங்கள்: விருதுகுன்ற -2 -107 திருஞானசம்பந்தர் நத்தார்படை -7 -80 சுந்தரர்
முகவரி: மாந்தை
மன்னார் மாவட்டம்
இலங்கை
தொபே. 0094 23
3230034
இஃது ஈழநாட்டுத் தலங்களுள் ஒன்று, மன்னார் தொடர் வண்டி நிலையத்துக்குக் கிழக்கே 7.5கி.மீ. தொலைவில் பாலாவி ஆற்றின் கரை மேல் உள்ளது. இலங்கையில் தலை மன்னாருக்கு அருகில் உள்ளது.
மாதோட்டம்.
இது ``மாவின் கனிதூங்கும் பொழின் மாதோட்ட நன்னகரில், பாவம் வினையறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல், தேவன் எனை யாள்வான் திருக்கேதீச்சரத்தானே`` என்னும் இக்கோயிலுக்குரிய, சுந்தரமூர்த்திநாயனாரின் தேவாரப் பகுதியால்அறியக்கிடக்கின்றது. சம்பந்தமூர்த்திநாயனாரும் இக் கோயில் பதிகத்தில் இதைக் கூறியுள்ளார்கள்.
இறைவர் திருப்பெயர்:- திருக்கேதீசுவரர். இறைவியாரது திருப்பெயர்:- கௌரியம்மை. தீர்த்தம்:- பாலாவி ஆறு
துவட்டா என்னும் முனிவர் தவஞ்செய்து பேறுபெற்றது. சம்பந்தர் பதிகம் ஒன்று. சுந்தரர் பதிகம் ஒன்று. ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.
திருச்சிற்றம்பலம்
|
No comments:
Post a Comment