Monday, December 31, 2012

விநாயகர் வழிபாடு.


  
                                         
                                                     விநாயகர் வழிபாடு.


இறைவழிபாடு செய்ய துவங்கும் பொழுது முதலில் விநாயக பெருமானை வழிபடல் வேண்டும்.
மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்துக்கொள்ளவும். கையில் மலர்களுடன்
பின் வரும் மந்திரங்களை கூறவும்.
எல்லாம் வல்ல விநாயகபெருமானே! நாங்கள் செய்யும் வழிபாடு எந்தவித இடையூறும் இன்றி நடை பெறுதல் வேண்டும். இடையூறுகள்   அகலும் பொருட்டு உன்னை வழிபடுகிறோம். நல்லருள் புரிவாயக!
மலர்களை பிள்ளையாரிடம் சேர்க்கவும்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்செஞ்சொல்
 பெருவாக்கும் பீடும்பெருக்கும்-உருவாக்கும்
 ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
 காதலால் கூப்புவர் தம் கை.”
மலர்களை கையில் எடுத்துக்கொண்டு பிள்ளையருக்கு அர்ச்சனை செய்யவும்.
1.ஓம் ஆனைமுகத்தானே போற்றி
2.ஓம் பார்வதி மைந்தனே போற்றி
3.ஓம் சங்கரன் புதல்வா போற்றி.
4.ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி
5.ஓம் ஐந்துக் கரத்தனே போற்றி
6.ஓம் அறுகம்புல் உகப்பாய் போற்றி
7.ஓம் ஒற்றை கொம்பனே போற்றி
8.ஓம் அன்பர்க்கு அன்பனே போற்றி
9. ஓம் ஒளவைக்கு அருளியவா போற்றி
10. ஓம் வினைகளை வேரறுப்பாய் போற்றி
11. ஓம் எருக்கம் பூமாலை அணிவோய் போற்றி
12. ஓம் இடையூறுகளை களையும் இறைவா போற்றி
13. ஓம் ஓங்கார வடிவே போற்றி
14. ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
15. ஓம் அண்டங்களை ஆள்வாய் போற்றி
16. ஓம் வளமெல்லாம் தருவாய் போற்றி

ஊதுபத்தி, தீபம் காட்டவும்.
இரண்டு வாழை பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவை வைத்து அமுதூட்டவும்.
பின் கற்பூரம் ஏற்றி பிள்ளையாருக்குக் காட்டவும்.
பாடல் பாடவும்.
”பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடுதனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.”

வினாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
வினாயகனே வேட்கை தணிவிப்பான் - வினாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

சிறிது மலர்களைப் பிள்ளையார் மீது போடவும். பின் அட்டாங்க வணக்கம் செய்யவும்.






                                   

Saturday, December 29, 2012

பேரூர் மார்கழி ஆதிரை நாள்

பேருர் ஆருத்ரா தரிசனம் அன்று எடுத்த புகைபடங்களை பகிர்வதில் மகிழ்கிறேன்(28.12.12)







.

Tuesday, December 25, 2012

கோயில்

சிவ தலங்கள் பற்றிய பகிர்வு.

தேவார பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதன்மை பெற்றதும் கோவில் என்று  குறிப்படபடுவதும் “சிதம்பரம்” என்னும் திருத்தலமாகும்.
இந்த திருக்கோவில் பற்றிய குறிப்புகளை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.


இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம்.


சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.  108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே.

வரும் 28-12-2012 வெள்ளியன்று மார்கழி திருவாதிரை.
ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிசேகம்.
 கோவை பேரூர் கோயிலில் மிகப் பெரிய அளவில் வழிபாடுகள் நடைபெரும் .தரிசனம் செய்ய கூட்டம் அலை மோதும்.