Friday, March 1, 2013

பாடல் பெற்ற சிவத்தலங்கள் துளுவநாட்டு திருத்தலம்(கர்நாடகா மாநிலம்) திருக்கோகர்ணம்


பாடல் பெற்ற சிவத்தலங்கள்
துளுவநாட்டு திருத்தலம்(கர்நாடகா மாநிலம்)
திருக்கோகர்ணம்
திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்திருற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை.

இத்தலம் மங்களூரிலிருந்து 247 கி.மீ,ஹுப்ளியிலிருந்து 161 கி.மீ பெங்களூரிலிருந்து 500 கி.மீ
கோவாவிலிருந்து 159 கி.மீ தொலைவிலும் உள்ளது.
மங்களூர்-கோவா செல்லும் கொங்கன் இரயில் பாதையில் கோகர்ன் ரோடு என்ற இரயில் நிலையம் உள்ளது. இதிலிருந்து ஆட்டோ,சிற்றுந்து,பேருந்து மூலம்ஊருக்கு செல்லலாம்.
தங்குவதற்கு விடுதிகள் உள்ளன. கோவில் அர்ச்சகர்கள் வீடுகளிலும் தங்க வசதிகள் உண்டு.
மூலவர்  :              மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
 அம்மன்/தாயார்   :              கோகர்ணேஸ்வரி, தாமிரகவுரி, பத்ரகர்ணி
 தீர்த்தம் :              கோடி தீர்த்தம்
              
              
பழைமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்      :              திருக்கோகர்ணம்
 ஊர்       :              திருக்கோகர்ணம்
 மாவட்டம்          :              உத்தர் கன்னடா
 மாநிலம்              :              கர்நாடகா

மேற்குப் பார்த்த ஆலயம். கோயிலமைப்பு, தமிழ்நாட்டு அமைப்பினின்றும் வேறானது. தெற்கிலும், மேற்கிலும் வாயில்கள் உள்ளன.மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது.
மூலஸ்தானம் சிறிய அளவுடையது. நடுவில் சதுரமேடை அதில் வட்டமான பீடம் - இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதனைச் சுவர்ணரேகையுள்ள சாளக்கிராம பீடமென்பர். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கையளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது.சிவலிங்கம் கீழே உள்ளது.அவரது சிரசை மட்டுமே விரலால் தொட்டுத் திருமேனியை உணரலாம். பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.
இத்தலத்தில் அதிகளவில் பித்ருபூஜை செய்கிறார்கள். இதனால் முன்னோர்கள் நரகத்திலிருந்தாலும் சொர்க்கம் செல்வார்கள் என்பதும், பவுர்ணமியன்று இந்த ஆற்றில் நீராடி சிவனை வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்ததற்கு ஈடான பாவம்) விலகும் என்பதும் நம்பிக்கை.

 இராவணன் தன் தவத்த்தால் ஈசனை மகிழ்வித்து பிராணலிங்கத்தை பெற்று இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான்.து மாலை வேளை போல் சற்றே இருள் கவிய, ராவணன் சந்தியாவந்தனம் செய்வதற்காக கையிலிருந்த லிங்கத்தை அருகில் நின்று கொண்டிருந்த கணபதியிடம் கொடுத்து விட்டு சென்றான். அவர் அதை கீழே வைத்துவிட்டார். உடனே அந்த லிங்கம் சப்த பாதாளங்களையும் தாண்டி கீழே சென்று ஊன்றி நிலைத்து விட்டது.


 பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் பேரவன்காண் பிறப்பொன்று மில்லாதான் காண்
கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண் கட்டங்கன் காண்கையிற் கபாலம் ஏந்திப்
பறையோடு பல்கீதம் பாடினான் காண் ஆடினான் காண்பாணி யாக நின்று
மறையோடு மாகீதம் கேட்டான் றான்காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
                                                                                                                                      -                                         திருநாவுக்கரசர்


“……..கால்களாற்பயனென் கறைக் கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களாற் பயனென்….
                                                                                                                             -திருநாவுக்கரசர்
                            
                           
                                                      .                       திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment