Tuesday, August 13, 2013

திரு அஞ்சைக்களம்- தேவாரத் திருத்தலங்கள்

திரு அஞ்சைக்களம்
தேவாரத் திருத்தலங்கள்      






 



இது சேரநாட்டு திருத்தலம். சுந்தரர் பாடல் பெற்ற தலம்.மலை நாட்டு திருத்தலம் இது ஒன்றே.

கேரள மாநிலம் பிரசித்தமான கொடுங்களூர்  பகவதி அம்மன்  திருக்கோவிலிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது.இந்த ஊரை திருவஞ்சிக்குளம் என்று அழைக்கிறார்கள். கொடுங்களூரிலிருந்து
நகரப்பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். கொடுங்களூரில் தங்குவதற்குப் பல  விடுதிகள் உள்ளன.

இறைவர்: அஞ்சைக்களத்தப்பர்

இறைவி : உமையம்மை.

தீர்த்தம்: சிவகங்கை.

இங்குள்ள சிவாலயத்தில் உள்ள நடராசமூர்த்தியின் பீடத்தில்” அஞைக்களத்து சபாபதி” என்று தமிழில் செதுக்கப்பட்டுள்ளது.இது சேரமான் நாயனார் தினமும் வழிபட்டமூர்த்தியாகும்.

இறைவருடைய தலையில் உருத்திராக்கமாலை அணிந்துள்ளார்.மூர்த்தியின் தலையிலேயே செதுக்கப்பட்டுள்ள உருத்திராக்கமாலை இறைவருக்கு பால் அபிசேகம் செய்யும் பொழுது தெளிவாகத்தெரியும்.”தலைக்கு தலை மாலை அணிந்ததென்னே ”என்ற சுந்தரர் பாடல் வரிகள்மூலம் அறியலாம்.

சுந்தரர்,சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருடைய உற்சவத்திருமேனிகள் இக்கோவிலில் உள்ளன.இவர்கள் இருவரும் முறையே வெள்ளையானையிலும் குதிரையிலும் திருக்கயிலாயம் சென்றார்கள்.அருகில் உள்ள  ”மேல்மகோதை”கடற்கரையிலிருந்துதான் அவர்கள் திருக்கயிலாயம் புறப்பட்டு சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.திருக்கயிலை சென்று அங்கிருந்து தான் வந்து சேர்ந்ததை அஞ்சைக்களத்தப்பருக்கு சுந்தரர் அறிவிப்பதாக தேவரப்பாடலில் தெரிவிக்கிறார்.

இன்றும் ஆடி மாத சுவாதி திருநட்சத்திரத்தன்று கோயம்பத்தூர் சேக்கிழார் திருக்கூட்டத்தினரால் சுந்தரர் குருபூசை இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.(கடந்த 80 ஆண்டுகளாக சீரும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.)

பரசுராமர் தன் தாயை கொன்ற பாவம் தீர வழிபட்டதலம்.
திருக்கோவிலின் முன்பு அழகிய உப்பங்கழி உள்ளது.

”தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே
 சடைமேல் கங்கைவெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்ததென்னே
அதன்மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கு நிகர் ஒப்பன் வன் திரைகள்
வலித்து எற்றி முழங்கி வலம்புரிகொண்டு
அலைக்கும் கடல் அங்கரைமேல் மகோதை
அணியர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே”
                                                                           -சுந்தரர்

அஞ்சைக்களத்தப்பரே போற்றி! போற்றி!
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி!






2 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. சிறப்புகள் பல கொண்ட ஆன்மீக தகவல்கள் நன்றிகள் பல !!

    ReplyDelete