Thursday, April 25, 2013

நால்வர் நல்கிய வழி - திருநாவுக்கரசர்


திருநாவுக்கரசர்

டுத்தாக சம்பந்தர் காலத்திலேயே அவருக்குமுன் தோன்றிய திருநாவுக்கரசுப் பெருமானைப்பற்றி சற்று சிந்திப்போம்.தெய்வநெறிச் சிவம் பெருக்கும் திருவாமூரில் தோன்றிவல்லமண் மருங்கணைந்து, தவமென்று பாயிடுக்கி,தலைப்பறித்து நின்றுண்ணும் அவமொன்று நெறி வீழ்வான் வீழாமல் அருளும்என அவரது தமைக்கையார் திலகவதியார் வேண்டுதலாலும்,பண்டு புரி நற்றவத்தாலும் இறைவன் சூலை தரதிருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்ப பெரு வாழ்வு வந்தது என நீறு அணிந்தார்”. “கூற்றாயினவாறு விலக்ககிலீர்என உலகேழின் வரும் துயரம் போமாறு புகன்றார். தலங்கள் தோறும் எழுந்தருளியுள்ள சிவ பெருமானை வணங்கி தேவாரப்பதிகங்களை அருளிச் செய்துள்ளார்.
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்
நினையாது ஒரு போதும் இருந்தறியேன்”-4ஆம் திருமுறை
எனவும்சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்”-4ஆம் திருமுறை
எனவும்காயமே கோயிலாக கடி மனம் அடிமையாக
 வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
ேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி
பூசனை ஈசனார்க்கு போற்றவி காட்டினோமே”.
என்று உடம்பைக் கோயிலாக் கண்டவர்,உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பதைதலையே நீ வணங்காய்என்று அங்கமாலையில் தெளிவுபட கூறியுள்ளார். சிவபெருமானுக்கு உரிய மூலமந்திரமானநமசிவாயஎன்னும் பஞ்சாக்கரத்தைசொற்றுணை வேதியன்எனத் துவங்கும் பதிகம் பாடி, கல் தூணில் கட்டிக் கடலில் ஆழ்த்தியபோதும் நற்றுணையாவது நமசிவாயவேஎன கூற,  கல் தூண் மிதந்தது. உலகனைவரும் போற்றும்படி பஞ்சாக்கரத்தின் பெருமையை உணர்த்தினார்.
நமசிவாயவே ஞானமும் கல்வியும்
நமசிவாயவே நானறி விச்சையும்
நமசிவாயவே நா நவின்று ஏத்துமே
நமசிவாயவே நன்னெறி காட்டுமேஎனக் கூறி பஞ்சாக்கரமே நமக்கு நல் வழி காட்டும் என உறுதிப்படுத்தியுள்ளார்.
திருஞானசம்பந்தருடன் இணைந்து பல சிவத்தலங்களுக்கும் சென்று சிவபெருமான் மீது பாடல்கள் பல பாடி அருளினார்.
நிலை பெறுமா எண்ணுதியேல் நீ வா
  நித்தலும் எம்பெருமானுடைய கோயில்புக்கு
   புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு
   பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
  தலையாரக் கும்பிட்டு கூத்தும் ஆடி
   சங்கரா செய செய போற்றி என்றும்
   அலைபுனல் சேர் செஞ்சடை யெம் ஆதி என்றும்
   ஆரூரா என்றென்றே அலறா நில்லே”- 6ஆம் திருமுறை
 என சிவத்தொண்டு செய்வதே உய்யும் வழி யெனக் கூறியதோடல்லாமல்
சிவத்தலங்கள் தோறும் உழவாரப் பணியையும் மேற்கொண்டார்.

அனைத்துச் சாதி மக்களையும் சைவ சமயம் என்ற கட்டுக்குள் ஒருங்கிணைத்து,
சாத்திரம் பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்”-5ஆம் திருமுறை
என்றும்
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து
  தரணியொடு வானளாவத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதவர்க்கே காந்தர் அல்லாராகீல்
அங்கமெல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
ஆவுரித்துத் தின்றுலவும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்கன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே-6ஆம் திருமுறை
ஆக சாதி பாராது சிவனடியார்கள் அனைவரையும் போற்றி வணங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

1 comment:

 1. கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
  நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

  ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

  இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

  தவம் செய்ய வேண்டும்!!!

  தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

  தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

  நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

  இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

  திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

  உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

  அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
  இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

  அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

  லிங்க்ஐ படியுங்க.

  http://tamil.vallalyaar.com/?page_id=80


  blogs

  sagakalvi.blogspot.com
  kanmanimaalai.blogspot.in

  ReplyDelete