Wednesday, February 20, 2013

பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலம் அவிநாசி


கொங்கு நாட்டில் பாடல்பெற்ற சிவத்தலங்கள்
திருப்புக்கொளியூர் (அவிநாசி)



கொங்கு நாட்டில் 7 சிவத்தலங்கள் பாடல் பெற்றவை.
அவற்றில் முதலில் வருவது அவிநாசி திருக்கோவில்.இத்தலத்தை திருப்புக்கொளியூர் என்று திருமுறை கூறுகிறது. இத்தலம் கோயம்புத்துரிலிருந்து கிழக்கே  42 கி.மீ. சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
அவிநாசித்தலதின் பெருமையினை  சுந்தரமூர்த்தி நாயனார் ஒரு பதிகமும், நாவுக்கரசு நாயனார் ஒரு திருத்தாண்டகமும், அருணகிரி நாதர் ஆறு திருப்புகழும் பாடியுள்ளனர்.
1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருக்கோவில்.அநேக பழைய கல்வெட்டுக்கள் காணக்கிடைக்கின்றன.சுவாமிக்கு 7 நிலைக்கோபுரமும் அம்பாளுக்கு  5 நிலைக் கோபுரமும் உள்ளன.தினமும் 6 கால பூசை சிறப்பாக நடைபெறுகிறது.தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின்  ஆளுகைக்கு உட்பட்டது.
காசியில் வாசி அவிநாசி என்றும் கொங்குநாட்டின் காசி என்றும் பெருமை படைத்தது.எக்காலமும் நாசமின்றி நிலைத்து நிற்பதால் அவிநாசி என்றும் பெயர் கொண்டது.
இறைவர்: அ/மி அவிநாசிலிங்கேசுவரர்.
இறைவி : அ/மி பெருங்கருணை நாயகி.
அறுமுகக்கடவுளுக்கு தனி சன்னிதி.
ஆடல்வல்லான் மற்றும் சிவகாமி அம்மன் சன்னிதி உயரமான மண்டபத்தில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் 60 அகவை(சஷ்டியப்பதபூர்த்தி) 80 அகவை(சதாபிஷேகம்) போன்ற விழாக்களை மக்கள் கொண்டாடுகின்றனர்.

கோவிலின் திருத்தேர் மிகவும் பெரியது.
சித்திரையில் பிரம்மோற்சவமும் பங்குனியில் முதலைவாய்பிள்ளை உற்சவமும் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்கள்.

முதலை தந்த மதலை:
சுந்தரர் திருப்புக்கொளியூர் திருவீதியில் செல்லும் போது எதிர் எதிரான இரு வீடுகளில்ஒன்றில் மங்கலஒலியும், பிரிதொன்றில் அமங்கலஒலியும் கேட்டு வினவ ஒன்றில் முப்புரி நூலணிவிழாவும் மற்றதில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதலை விழுங்கிவிட்டதால் அவனைஈன்ற பெற்றோர் உபநயனம் நடைபெறாத ஏக்கத்தால் அழுகின்றனர்.சுந்தரர் வருகையைக் கண்ட அப்பெற்றோர் நாயனாரை வணங்க அவர் இறைவனை இறைஞ்ச, கண்ணுதல் கடவுள் அருளால்குளத்தில் நீர் பெருகி முதலை வந்து முன்று ஆண்டு வளர்ச்சியோடு பிள்ளயை உமிழ்ந்தது.
மகிழ்ச்சியடைந்த  பெற்றோர் முன்னிலையில்  அச்சிறுவனுக்கு உபநயனம் நடத்திவைத்தார் சுந்தரர்.  
                                   
 “எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம் பெருமானயே
உற்றாய் என்றுன்னையே உள்குகின்றேன் உணர்ந்துள்ளதால்
புற்றாடரவா புக்கொளியூர் அவிநாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே.”
                                                                               -சுந்தரர்.

                          ” அரிய பொருளே அவிநாசி அப்பா”
                                                                            - மாணிக்கவாசகர்


                                               திருச்சிற்றம்பலம்.

1 comment:

  1. Harrah's Resort SoCal Casino - MapYRO
    Find 공주 출장샵 out where 부산광역 출장샵 to stay near Harrah's Resort 거제 출장안마 SoCal Casino and other places to stay near Harrah's Rincon Casino and 시흥 출장안마 other places to stay near Harrah's Rincon 태백 출장마사지

    ReplyDelete