Thursday, February 21, 2013

கொங்கு நாட்டுத் தலம்-திருமுருகன்பூண்டி


கொங்கு நாட்டுத் தலங்கள்
திருமுருகன்பூண்டி

இத்தலம் கோவை மாவட்டம் அவிநாசியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.திருப்பூரிலிருந்தும் ( 8 கி.மீ) இங்கு வரலாம்.

முருகப்பெருமான் சூரபத்மனை வதைத்ததனால் எற்பட்ட ப்ரஹ்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக இத்தலத்துக்கு வந்து மணலில் சிவலிங்கம் உருவாக்கி வழிபட்டதலம்.
இறைவன் : அ/மி. முருகநாதீசர்
இறைவி:அ/மி முயங்குபூண்முலையம்மை(ஆலிங்கபூஷண ஸ்தனாம்பிகை)

ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு சன்னதி(தெற்கு பார்த்த சன்னிதி.).
வள்ளி தெய்வயானையுடன் அழகிய மயில் வாகனத்துடன் கூடிய சிற்பம் மிகவும் நேர்த்தி.

ஆடல்வல்லான் இங்கு ப்ரஹ்மதாண்டவம் ஆடுகின்றார்.

63 நாயன்மார்,பஞ்சலிங்கங்கள், பைரவர் சன்னதிகளும் உண்டு. கேதுவுக்கு தனி சன்னதி உள்ளது.

தீர்த்தம்:சுப்பிரமணியர் தீர்த்தம் . நந்திமுகம் கொண்டது.இறைவருக்கு இங்கிருந்துதான் நீர் அபிடேகத்திற்கு எடுக்கப்படுகிறது.இந்த தீர்த்தத்தினால் மனநோய் மற்றும் உடல் உபாதைகள் தீரும் என்றும் நம்பிக்கை உள்ளது.

தலவிருட்சம்:குருக்கத்தி.

ஆலயம் மேற்கு பார்த்தது.மிகவும் பழமையான து.முதலாம் விக்கிரமன் கால (1004-1045)கல்வெட்டுக்கள் காணக்கிடைக்கின்றன.மத்திய தொல் பொருள் ஆராச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.எனினும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
மாசியில் ப்ரம்மோற்சவம் மற்றும் தைபூசம் சிற்ப்பாக கொண்டாடப்படுகின்றன.
சுந்த்ரமூர்த்தி நாயனார் பாடல் பெற்றது. அவர் சேரமான் பெருமானிடம் பெற்றுவந்த பெரும்நிதியை சிவபெருமான் வேடுவர்களை அனுப்பி பறித்து பின் நாயனார் வேண்ட திருப்பி கொடுத்ததாகவரலாறு கூறுகிறது.

“கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறை கொண்டு ஆறலைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர்வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானிரே”
                                                                                                                           -சுந்தரர்.

                                                           திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment