Thursday, February 21, 2013

கொங்கு நாட்டு திருத்தலங்கள்-திருநணா


கொங்கு நாட்டு திருத்தலங்கள்
திருநணா(பவானி)
இத்தலம்  தற்பொழுது பவானி என்று வழங்கப்படுகிறது.  சேலம்,ஈரோடு கோவை முதலிய பெருநகரங்களில் இருந்து செல்ல வசதிகள் உள்ளன.
திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற பெருமையுடையது.பவானி ஆறும் காவிரி ஆறும் கூடும் இடத்தில் உள்ளது.சரசுவதி ஆறும் இங்கு கூடுவதாக ஐதீகம்(கண்களுக்குப்  புலப்படுவதில்லை). எனவே பவானி கூடல் என்றும் பவானிகூடுதுறை என்றும் பவானி முக்கூடல் என்றும் வழங்கப்படுகிறது.
பழமையான திருக்கோவில்.
இறைவன்: /மி சங்கமேஷ்வர்

இறைவி: /மி வேதநாயகி அம்பாள்

தீர்த்தம்: பவானி-காவிரி சங்கமம்.
குபேரன்,விசுவமித்திரர்,பராசரர் முதலியோர் வழிபட்ட தலம்.
”பந்தார் விரல்மடவாள் பாகமா நாகம் பூண்டேற தேறி
அந்தா அரவணிந்த அம்மானிடம் போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார் பொழிலில் வண்டு பாடச்
செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திருநணாவே.
                                                               -சம்பந்தர்

ஆறுமுகக்கடவுளுக்கு தனிப்பெரும் சன்னதி உள்ளது.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல் உண்டு.
இக்கோவிலுக்குள் ஆதிகேசவப்பெருமாள் கோவில் இருப்பது சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒர் எடுத்துக்காட்டு.

ஆடல்வல்லான், 63 நாயன்மார், தென்முகக்கடவுள், ஜுரஹரேஸ்வரர், சனீஸ்வரர் ஆகியோர்க்கு தனி சன்னிதிகள் உள்ளன.
சமீப காலத்தில் 63 நாயன்மார்க்கு புதிய ஐம்பொன்சிலைகள் செய்யப்பட்டு நடராசர் சன்னதிக்கு எதிரில்அழகுற கொலு ப்படி போல அமைத்து பொலிவு செய்துள்ளனர்.
மத்திய தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உட்பட்ட பதிவுகளை ப்பார்க்க முடிகிறது. இந்து அறநிலையத் துறை ஆளுகைக்கு உட்பட்டது.
இக்கோவிலுக்கு தனியாகஒரு யானையும் உண்டு.
இங்கு திருமணங்கள் நடைபெறுகின்றன.சில முகூர்த்தநாட்களில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவதும் உண்டு .திருமண பரிகார பூசைகளும் காவிரிக்கரையில் நடைபெறுகின்றன.
கூடுதுறையில் குளிப்பதில் தனி ஆனந்தம் தான். தினசரி நீராடுவோரும் உண்டு. நீராடும் குழுவினர் என்ற ஒர் அமைப்பும் இங்கு உள்ளது.
இங்கு உள்ள அம்பாள் ஒருமுறை ஆங்கிலேய கலக்டெர் கனவில் தோன்றி அவர் தங்கி இருந்த கட்டிடத்தில் இருந்து வெளியேற்ற மறுகணம் அக்கட்டிடம் விழுந்தது.ஆங்கிலேயர் பரம பக்தரானார்.அவர் வேற்றுமதத்தினராதலால் அவர் வழிபட மதில் சுவற்றில் வெளியில் இருந்து தரிசனம் செய்யும்வண்ணம் அமைப்பு உள்ளது. அவர் அம்பிகைக்கு தந்தத்தினால் ஆன பள்ளியறை கட்டிலை பரிசளித்துள்ளார்.அதை இன்றும் நாம் காணலாம்.
                                                           திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment